மத்திய முகாம் பிரதேசத்தில் மூன்றாம் போக பாசிப்பயறு அறுவடை விழா!

விவசாய திணைக்களம் அண்ணமலை(மாகாண இடை)விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் மூன்றாம் போகமாக வயல் நிலங்களில் செய்கை  பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா நிகழ்வு இன்று(18) மத்தியமுகாம்-4 பிரிவில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ சனீரின் வழிகாட்டலுக்கமைய களப்பயிர் பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ நிகாரின் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்பட்ட இத்திட்டமானது நிலையப்பொறுப்பதிகாரி ச.சசிகரன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் குறித்த நிகழ்வானது இப்பகுதிக்கு பொறுப்பான தொழிநுட்ப உதவியாளர் ஆர்.ரேணுகாவின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் எ.ஜெய்னுலாப்தீன் கலந்து கொண்டுதிட்டத்தின் பிரதிபலன்கள் மற்றும் எதிர்வரும் போகத்தில் சோளப்படைப்புழு கட்டுப்பாடு சம்பந்தமாகவும் தெளிவு படுத்தினார்.
அத்துடன் இந்நிகழ்வில் விவசாயப் போதனாசிரியர் எம்.எஸ்.எம் ஜெனித்கான் மற்றும் பெருமளவிலான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அண்மைக்காலமாக அன்னமலை விவசாய விரிவாக்கல்பிரிவின் ஏற்பாட்டில்  பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.