அட்டன் லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதனால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அதிகாரிகளினால் பணிப்பு!

மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்வதன் காரணமாக மலையகத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன..

அத்தோடு, கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்படுகின்றது.

அந்தவகையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டம் புரோடப் பிரிவில் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சுமார் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இவ்வீதியினேயே பயன்படுத்தி வருகின்றார்கள்.

எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்பட்டுள்ள மண்சரிவை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அடிக்கடி மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதனால் இப்பகுதியில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.