கொடுங்கோல் ஆட்சி: நிரூபித்துள்ளது ஐ.நா. – போட்டுத் தாக்குகின்றார் மங்கள!!

“இது நடுநிலையில்லாத ஆட்சி. நீதி தவறிய அநீதியான ஆட்சி. கொடுமையும், அட்டூழியமும் நிறைந்த ஆட்சி. ஒட்டுமொத்தத்தில் இந்த ஆட்சி கொடுங்கோல் ஆட்சி. இதை நிரூபிக்கும் வகையில்தான் ராஜபக்ச அரசு மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் அமைந்துள்ளன.”

– இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

குற்றவாளிகளின் கையில் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்கள் முதலில் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள கண்டனத்தை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

20ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி நாட்டிலுள்ள புத்திஜீவிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிப்புக்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ள ராஜபக்ச அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.