பனங்கட்டி தயாரிப்பதற்கு உற்பத்தி அடிப்படையிலான மானியம் வழங்க முயற்சிப்பேன் – அங்கஜன் உறுதி!!!

பனை அபிவிருத்தி அதிகார சபையின் பங்கேற்புடன் பனை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களிற்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (18) மாலை யாழ் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையிலும் வடமாகாண பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் பங்கேற்புடன்  இடம்பெற்றது.

கனடாவில் யாழ் மாவட்டத்தின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தக்கூடிய இரு கற்பகங்களை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்தி பத்திராயா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த மாதம் 5000 கிலோ பனங்கட்டி வெளிநாட்டுகளுக்கு அனுப்புவதற்கு தேவைப்பட்டது. எனினும் 2000 கிலோ பனம் கட்டியே எமக்குக் கிடைத்தது.

யாழ்ப்பான பனை உற்பத்திப் பொருட்களுக்கு தெற்கில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் சிறந்த கேள்வி  நிலவுகின்ற நிலையில் குறித்த துறையை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு அனைவரும் தமது சொந்தத் துறையாக பனைக் கூட்டுறவைக் கருதி முன்னேற்ற வேண்டும்.

பனை உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு அரசாங்கம் சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் நீர்கொழும்பில் புதிய கற்பகதருக் கடைத் தொகுதி  திறக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பனம் உற்பத்தியாளர்கள்

அரசாங்கம் கித்துள் உற்பத்திக்கு மானியம் வழங்குகிறது பனம் உற்பத்திக்களுக்கு மானியம் வழங்குவதில்லை. இதனால் பனை உற்பத்தியாளர்கள் தொழில் ரீதியான நெருக்கடிகளுக்கும் வாழ்வாதார ரீதியான நெருக்கடிகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது கித்துள் உற்பத்திகளுக்கு வரிவிலக்கை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன் பனை உற்பத்திப் பொருட்களுக்கும் தொழில் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் வரி அறவிடுகின்றது. இலங்கை மது வரி சட்டத்தில் கித்துள் பாணி உள்ளடங்காத போதிலும் பதநீர் மது வரி சட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

பனையில் இருந்து எடுக்கப்பட்ட பதநீரானது 11மணித்தியாலத்திற்கு பின்னரே மதுவாக மாறுகின்ற நிலையில்   மருத்துவ குணங்கள் உடைய இயற்கை பானமாக பலரும் இதை அருந்துகிறார்கள். ஆகவே அரசாங்கம் பனை உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு சலுகைகளை வழங்கும் பட்சத்தில் குறித்த உற்பத்தி துறையை வீழ்ச்சி அடையாமல் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

இதன் போது ஊடகங்களுக்குகருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன்

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பனை வளம் சம்மந்தமாக பேசப்பட வேண்டும் என நிகழ்ச்சி நிரலில் இருந்த போதும் அது பற்றி பேச வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை அதனாலேயே நாங்கள் தனித்தனியாக ஒவ்வொரு துறை சம்மந்தப்பட்டவர்களையும் அழைக்து கலந்துரையாடி வருகிறோம்.

அந்த வகையில் இன்று பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களை அழைத்து கலந்துரையாடி இருந்தோம். அவர்களுடைய வாழ்வாதரம், தொழில் சம்மந்தமாக, அவர்கள் நலன் சம்மந்தமாகவும் ஆராயப்பட்டது.

அதாவது நீண்ட காலமாக அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பில் குறிப்பாக போத்தலில் அடைப்பதற்கான வரியை குறைத்து எமது மரபு ரீதியாக இத் தொழிலை ஊக்குவிப்பதற்குரிய வழிமுறைகளை எப்படி ஏற்படுத்தலாம் எனவும் கலந்துரையாடப்பட்டது. பனங்கட்டி  தயாரிப்பதற்கு மானிய அடிப்படையிலான ஊக்கம் வழங்கல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மற்றும் எம் குடிமனைகள் மத்தியில் தவறனைகள் காணப்படுகிறது எனவே மக்களுக்கு இடையூறு வழங்காமல் இத்தவறணைகள் இயங்க வேண்டும். இத் தொழிலை நம்பி தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் என பலர் உள்ளனர்.

இத்தவறணைகளை புதிப்பித்து மக்களுக்கு இடையூறு வழங்காமல் செய்வதற்கு உரிய திட்டங்கள் கடன் வசதிகள் செய்து கொடுத்து அத் தொழில் சார்ந்தவர்களுக்கு முழுமையான நலனை கொடுக்கும் கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது. இந்த துறை தொடர்பான அமைச்சுடன் கலந்துரையாடி இந்த துறை சார்பானவர்கள் நலனடைய வேண்டும் என்பதே எமது நோக்கம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.