பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு!!!

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி இராமநாதபுரம் வெற்றிப்பாதை சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பெண்கள் எதிர்கொள்ளம் சவால்கள், பாலியல் லஞ்சம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் பாதுகாப்பு, போதைப்பொருள் பாவனை உள்ளிட்டவற்றிலிருந்து குடும்ப வன்முறை மற்றும் பாலியல்சார் விடயங்களில் மக்கள் வழிப்புணர்வுடன் செயற்படுவது தொடர்பில் தெருவெளி நாடகம் ஊடாக குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மக்களை தெளிவூட்டும் துண்டுபிரசுரங்களும் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அரங்கேற்ற குழுவினரால் குறித் தெருவெளி நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்