ஊடகவியலாளர் றியாத் ஏ மஜீத்தின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த கெளரவமாகும் – ஹரீஸ் எம்.பி வாழ்த்து!!!

சிலோன் மீடியா போரத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான றியாத் ஏ மஜீத், அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக் கழகத்தின் கெளரவ கலாநிதி பட்டம் பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைவதோடு அவரை பாராட்டுகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரளின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில் ,
ஊடகவியலாளர் றியாத் ஏ.மஜீத், அமெரிக்காவின் உலக தமிழ் பல்கலைக் கழகத்தினால் ஊடகத்துறை மற்றும் சமூக சேவைக்கான  கெளரவ கலாநிதி பட்டம் வழங்கி  கௌரவிக்கபபட்டமையானது இத்துறைகளில் பிரகாசிப்பவர்களுக்கு கிடைக்கும் உச்ச கெளரவமாகும்.
சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி றியாத் ஏ.மஜீத்,   25 வருட கால அரச சேவை அனுபவத்தையும் 25 வருட கால சமூக சேவை மற்றும் 11 வருட கால ஊடகப்பணி ஆகியவற்றில் சிறந்த சேவையாற்றி வருகின்றமை பாராட்டுகின்றேன்.
எனது நேரடி அரசியல் பிரவேசத்திவிருந்து என்னோடு இணைந்து பயணிக்கும் கலாநிதி றியாத் ஏ.மஜீத், எனது ஊடகச் செயலாளராக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதையிட்டு பெருமையடைகின்றேன.
ஊடகத்துறையில் ஊடகவியலாளர்களின் நலன்களை மையப்படுத்தி சிலோன் மீடியா போரம் எனும் ஸ்தாபனத்தை ஸ்தாபித்து அதனூடாக பல்வேறு பணிகளை ஊடகவியலாள்களுக்கு ஆற்றிவருவதானது அவரின் ஆளுமையினை வெளிக்காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்