1 இலட்சம் வீதி புனரமைப்பு விடயத்தில் நற்பிட்டிமுனை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை!!!

1 இலட்சம் வீதி புனரமைப்பு விடயத்தில் நற்பிட்டிமுனை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமைக்கு மாநகர சபை உறுப்பினர் றபீக் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு  செவ்வாய்க்கிழமை (29 ) 2.30 மணி முதல் 6 .30 மணிவரை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் நடைபெற்றபோது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வீதி புணரமைப்பிற்கென 1 இலட்சம் வீதிகள் புனரமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் கல்முனை மாநகர சபையில் உள்ள பிரதேசங்களில் நற்பிட்டிமுனை பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.எந்த வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை முதல்வர் வெளிப்படுத்த வேண்டும்.

முதல்வர் பதிலளிப்பதற்கு பதிலான எமக்கு தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவரே பதிலளிக்கின்றார்.ஒரு சபையை பெறக்கூடிய நிலையில் உள்ள நற்பிட்டிமுனை பகுதி இத்திட்டத்தில் உள்வாங்கப்படாமைக்கு எனது ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கின்றேன் என கூறினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.