கொரோனா பரவல் தொடர்பாக அடுத்த 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது – இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் சம்பந்தமான விடயத்தில் அடுத்த 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய பெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனை சம்பந்தமான அறிக்கை கிடைக்க உள்ளதால், இந்த காலப் பகுதி மிகவும் முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களை காண நாடு முழுவதும் இருந்து பலர் வந்துச் சென்றுள்ளனர். பரிசோதனை முடிவுகள் மூலம் ஒரு சரியான தீர்மானத்திற்கு வர முடியும்.

மக்கள் தேவையற்ற வகையில் சமூகத்திற்குள் நடமாடக் கூடாது. தேவையற்ற வேலைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும் இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

முககவசங்களை அணியுமாறும் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுமாறும், சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றுமாறும் இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்