ஸ்ரீலங்காவில் இது வெட்கக்கேடான விடயம். – கடுமையாக விமர்சித்த அமெரிக்கத் தூதுவர்!!!

ஸ்ரீலங்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே அமெரிக்கா எம்.சி.சி உதவித் திட்டத்தை வழங்க முன்வந்தது. எனினும் அது இவ்வளவு தூரம் அரசியலமயமாக்கப்பட்டமை வெட்கக் கேடான விடயம் என்று அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் சாடியுள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

ஸ்ரீலங்காவின் வேண்டுகோளை தொடர்ந்தே அமெரிக்கா எம்.சி.சி உதவிதிட்டத்தை வழங்க முன்வந்தது. வறுமையை ஒழிப்பதும் அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் இலக்கை நோக்கமாக கொண்டே இந்த வேண்டுகோளை ஏற்றோம் என்று அமெரிக்காவின் அபிவிருத்தி முகவர் அமைப்பான எம்.சி.சியின் ஸ்தாபன சாசனம் தெரிவித்துள்ளது.

உத்தேச எம்.சி.சி உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா என்பதை தீர்மானிக்கவேண்டியது அரசாங்கமாகும். அரசியல் நோக்கமற்று, தரவுகளை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு கட்டமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்படுவதை கருத்தில் கொள்ளும்போது எம்.சி.சி உடன்படிக்கை மிக அதிகளவிற்கு அரசியல் மயப்படுத்தபட்டுள்ளமை வெட்கக்கேடான விடயமாகும்.

உத்தேச 480 மில்லியன் நன்கொடை-(கடனில்லை), போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல் மூலமும், வேளாண் பொருட்களை சந்தைக்கு கொண்டுசெல்வதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குகின்றது.

பத்திரிகைகளில் நாளாந்தம் வெளியாகும் விடயங்கள் இவை இலங்கை மக்களின் நலன்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் இவை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.