எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் வரலாம்? பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது,

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எனவே மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை சேர்த்துவைத்திருக்கும் வரை ஊரடங்குச் சட்டம் காத்திருக்காது. ஆகவே எப்போதும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்