பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் – க.மகேசன் தெரிவிப்பு !!!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 400 பேரில் புங்குடுதீவை சேர்ந்த 7 பேர் அடங்குகின்றனர். அந்த 7 பேரும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் இன்று (05) தெரிவித்தார்.

மேலும்,

“இதனைவிட புங்குடுதீவை சேர்ந்த இருவர் ஊருக்கு வந்து சென்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து சுகாதாரப் பகுதியினர் அந்த நிலைமையை ஆராய்ந்து அந்த குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை கடந்தவாரம் மருதங்கேணியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் தொடர்பு பேணியதன் அடிப்படையிலே அவர்களும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதேபோன்று மன்னார் பகுதியிலும் இந்திய மீனவர்களுடன்தொடர்பு பேணிய 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தினை பொறுத்தவரை பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. ஆனாலும் அபாயகரமான நிலைமையையும் சமூகப் பொறுப்பையும் உணர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதும், குடும்ப உறவுகளை பாதுகாப்பதோடு சமூகத்தையும் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கடமை.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அரசால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நடைமுறை தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆகவே இந்த கல்வி நடிவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல கூட்டங்கள் கூடுதல் ஆலயங்களிலே வழிபாட்டுத் தலங்களிலேயே மக்கள் ஒன்றுகூடுதல்களை ஏற்படுத்தல் போன்றவையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட வேண்டும்.

சந்தைகளில் மற்றும் ஏனைய வணிக நிலையங்களில், போக்குவரத்து சேவைக்காக ஒன்று கூடும்போது சமூக இடைவெளி பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.