ஆசன எண்ணிக்கைக்கே அனுமதி; பஸ், ரயிலில் முகக்கவசம் கட்டாயம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!!!

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் இனம் காணப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து அமைச்சு இன்று முதல் பயணிகள் போக்குவரத்து நடைமுறைகளில் பின்பற்றப்பட வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதற்கிணங்க பயணிகள் முகக்கவசம் அணிவது கண்டிப்பானது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க பயணிகள் போக்குவரத்து பஸ்களில் அனைத்துப் பயணிகளும் சாரதியும் நடத்துநரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அத்துடன் ரயில் பயணிகள் ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்பாகக் கைகளை கழுவுவது, முகக் கவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சேவையில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும்.

பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற திட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் குறைவடைந்ததைத் தொடர்ந்து, அதனைப் பெரிதளவில் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்தநிலையில், உடன் அமுலுக்கு வரும் வரையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.