கொடிக்காம மக்களின் கவனத்திற்கு – புங்குடுதீவு பெண் கொடிகாமத்தில் இறங்கி பயணித்திருக்கின்றார்.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு காெரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50 பேர்வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

எனவே அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021-2226666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பிரதேசத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமணைக்கோ தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளானோர் பிரதேசத்தில் காணப்படலாம் என்ற அடிப்படையில் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் அவசர தேவைகள் தவிர்ந்த தேவையற்ற விதத்தில் நடமாடுவதையும் ஒன்றுகூடுவதையும் தவிர்க்குமாறு சுகாதார மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து, புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை 12.30 புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் அதிகாலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளர்.

எனவே கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்