திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.

எப்.முபாரக்  2020-10-06
திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில்   அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.
தற்போது கொவிட் 19 தொற்றாளர்கள்  நாட்டில் சமூகத்தில் இருந்து அடையாளங்காணப்பட்டதனை தொடர்ந்து மாவட்டத்தில் முன்பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்கள் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறையால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் கடைப்பிடித்தல் இன்றியமையாயதது.அத்துடன் மிக்க அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படல் மூலம் இவ்வைரசிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.கடந்த காலங்களில் நாம் பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீள கடைப்பிடித்தல் காலத்தின் தேவையாகும்.
விசேடமாக முகக்கவசம் அணிதல் ,ஒரு மீற்றர் சமூக இடைவெளி பேணல், கைகளை கழுவல் என்பன அனைவரும் பிரதானமாக கடைப்பிடித்தல் வேண்டும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்தும் கொவிட் 19 தொடர்பான தகவல்களை பெறும் கட்டமைப்பை உடன் ஏற்படுத்துமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதுடன் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் தமது வளாகத்தில் முற்றாக சுகாதார நடைமுறைகளை கையாள வேண்டும்.மக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அரசாங்கம் தற்போது குறித்த வைரசை ஒழிக்க தேவையான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. பொதுமக்களாகிய நாம் அனைவரும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை அவதானமாக கடைப்பிடித்தல் மூலம் இதன் பாதுப்பிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.
மேலும் பொதுமக்கள் வீணாக ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வைபவங்கள் , ஒன்றுகூடல்களை நினைத்தவாறு மேற்கொள்ள முடியாது.அவசியம் என்று கருதுவதனை  நடாத்த சுகாதார துறை மற்றும் பொலிஸ்  முன் அனுமதி  கட்டாயம் பெறப்படல் வேண்டும். அவ்வாறு செயற்படாதவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை உரிய திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லயனல் குணதிலக்க , முப்படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0719300966

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்