ஆவாக்குழு தலைவனின் வீட்டின் மீது தாக்குதல்!

ஆவா குழுவின் தலைவர் வினோதனின் வீட்டின் மீது, தனுறொக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணுவில் பகுதியில் உள்ள வினோதனின் வீட்டின் மீது இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதலின் போது, குறித்த குழுவினர் தொலைக்காட்சி பெட்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் எரித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக, சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.