தென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு!!!

பாறுக் ஷிஹான்

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்படவிருந்த 2014/2015ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட, முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் இது தொடர்பில்   அறிவித்தார்.

நாளை  (10) முதல் நடத்தப்படவிருந்த மேற்படி பரீட்சைகள், தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த    பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்