நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு!!!

பாறுக் ஷிஹான்
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் நாடுபூராகவும்   நடைமுறைப்படுத்தப்பட்ட    சௌபாக்கியா  வேலைத்திட்டத்தின் கீழ்  நாவிதன்வெளி  பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு இன்று(9) ஆரம்பித்து வைக்கப்பட்டது .

பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் செயலகத்தில் உள்ள திணைக்கள பிரிவுகளின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இப்பயன்தரு மரங்கள் நடப்பட்டன.சுமார் 35 க்கும் அதிகமான பிளாஸ்டிக்  பரல்களில்  பயன்தரு மரங்களான மா ஜம்பு தோடை எலுமிச்சை கொய்யா மாதுளை என  ஒவ்வொரு  திணைக்கள பிரிவினர் நட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில்  நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா  ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன் , கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்,  நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித்   , சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம் , உள்ளிட்ட  அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில்   சவளக்கடை  விவசாய விரிவாக்கல் நிலைய  பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன்  ஆலோசனை வழங்கி இருந்தமையும்  நேற்று (8)மாலை குறித்த காணி பகுதி துப்பரவு செய்யப்பட்டு திட்டமிடலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்