கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த நபர்கள் டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் 14 நாட்கள் கிளிநொச்சி முழங்காவிலில் உள்ள 65வது படைப்பிரிவின் படையினர் பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன். குறித்த கண்காணிப்பு காலத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் கண்காணிப்பு காலம் முடிவடைந்த நிலையில் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவர்களிற்கான சான்றிதள்களையும் வழங்கி வைத்திருந்தனர். இதன்புாது அவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த இரணைமடு இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி குறிப்பிடுகையில்,
தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தலுடனான நிலை காணப்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நீங்கள் இங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்புகின்றீர்கள். நாட்டில் தற்போதுஉள்ள சூழலை கருத்தில் கொண்டு மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். எம்மை பாதுகாப்பதன் ஊடாக நாட்டின் அனைத்த சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.
இங்கிருந்து 14 நாட்களை நிறைவு செய்து வீடு திரும்பும் நீங்கள் சுய தனிமைப்படுத்தல் காலமாக மேலும் 14 நாட்கள் வீடுகளில் தங்கியிருத்தல் வேண்டும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்டோருடன் படையினரும் விரைவாகவும், அவதானமாகவும் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டை நேசிக்கின்ற அனைவரும் இணைந்து குறித்த ஆபத்திலிருந்து நாட்டையும், சமூகத்தையும் பாதுகாக்க ஒன்று சேர்வதன் ஊடாக இலகுவாக வெற்றி காண முடியும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து அவர்கள் விசேட பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்