சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் தொழுகை!!!

அரசாங்க அறிவுறுத்தலுக்கமைய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் இன்று மதியம் ஜீம்மா தொழுகை நடைபெற்றது.

அந்த வகையில் வவுனியா நகர பெரிய பள்ளிவாசலின் பிரதான கதவுகள் மூடப்பட்டு, முககவசம் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 50- 60 பேர் வரையானோரை மட்மே பள்ளிக்குள் அனுமதித்து மதிய நேர ஜீம்மா தொழுகை இடம்பெற்றது.

இதன்காரணமாக பள்ளி வாசல்களுக்கு வருகை தந்த பலரும் உள்ளே சென்று தொழுகையில் ஈடுபட முடியாது திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்