சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வுகள் திருகோணமலையில்.

எப்.முபாரக்  2020-10-09
0719300966
சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வுகள் இன்று(9) திருகோணமலை 5ம்கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரேவத சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.
சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன கலந்து கொண்டார்.
திருகோணமலை மாவட்ட சிறுவர்தின கொண்டாட்ட நிகழ்வை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுவர் இல்லங்களின் சிறார்களையும் ஒன்றிணைத்து அவர்களை சந்தோசப்படுத்தும் மற்றும் திறமைகளை வெளிக்கொணரும் முழுநாள் நிகழ்வாக நடாத்த  ஏலவே திட்டமிட்டபோதும்  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலை காரணமாக திட்டமிட்டபடி நடாத்த முடியாதுள்ளது.
இருப்பினும் இந்தளவில் சிறிதாகவும் திறன்பட நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறுவர்களது சுக நலன்களை விசாரித்து அவர்களை பார்க்க வந்தமை  தமக்கிகு கிடைத்த பாக்கியமாகும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
 அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
,சிறுவர்கள் நாட்டின் சொத்தாகும். நாளைய உலகை பாரம் எடுக்கவுள்ள தலைவர்கள் சிறுவர்களே.சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தி செயற்படுத்தி வருகின்றது. சிறுவர்களை உரிய முறைப்படி பாதுகாக்க  சிரத்தை காட்டும்போது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம். எனவே சிறுவர்களது நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க நாம் உறுதுணை கொள்வதுடன் அவர்களுக்கு முன்மாதிரியாக செயற்படல் இன்றியமையாயதது.
இன்று இளைஞர்கள் பலர் நாம் எதிர்பார்த்த இலக்குகளை விடுத்து நடத்தை தவறி தமது எதிர்காலத்தை இருள் யுக நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இவர்களை வழிப்படுத்துவது காலத்தின் தேவை என்றும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
திறன்களை வெளிப்படுத்திய சிறுவர்களுக்கு இதன்போது அரசாங்க அதிபரால் பரிசில்களும் வழங்க வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொலிஸ் அதிகாரி உட்பட சிலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.