காரைதீவு வாழ் மக்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் முக்கிய அறிவித்தல்…

சென்ற 2020.10.03 ம் திகதி கட்டுநாயகவிலிருந்து புறப்பட்டு அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ் வண்டியில் காரைதீவைச்சேர்ந்த ஒருவர் பிபிலயிலிருந்து ஏறி பிற்பகல் காரைதீவில் வந்து இறங்கியுள்ளார்.

இவர் வந்த அந்த வண்டியினுள் வந்த தெஹியத்த கண்டியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே குறித்த நபர் அல்லது அவரைப்பற்றி தெரிந்தவர்கள் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அவரது பெயர். விலாசம் போன்ற விபரங்களை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றார்.

இதனை தெரியப்படுத்துவதன் மூலம் இச்சமூகம் எதிர்நோக்கும் பாரிய கொரோனா தொற்று ஆபத்தை தடுத்த பெருமை இவருக்கு உரித்தாகும்.

இவ்வாறு காரைதீவு வாழ் மக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி: ஜீவராணி சிவசுப்ரமணியம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பொது இடங்களுக்கு செல்லும் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு பிரஜைகளும் சுய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்