5ம் தர புலமை பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார நடைமுறையுடன் ஆரம்பம்.

5ம் தர புலமை பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது.

அம்பாறை மாவடடத்திலுள்ள பல கல்வி வலயங்களிலும் இன்று 5ம் தர புலமை பரிசில் பரீட்சை நடைபெற்று வருகின்றது.

சுகாதார பரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வதுடன் மாணவர்கள் கைகளை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களை அழைத்து வரும் பெற்றோரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு பாடசாலைக்கு சமூகமளிப்பதை காணமுடிகிறது.

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்தில் 250ற்கு மேற்பட்ட மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்