கடும் காற்றினால் மரங்கள், கூரைகளுக்கு சேதம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

077 075 75 76

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிவரும் கடும் காற்றினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக்  கூரைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மட்டக்களப்பு – ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உட்பட பல பகுதிகளில் காற்றின் வேகம் இன்று (13) அதிகரித்து காணப்பட்டதால் குடிசை வீடுகள் பாதிப்படைந்து காணப்பட்டதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் காற்று வீசி வருவதினால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களும், கூலி வேலை செய்வோர்களும் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்