மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது!!!

பாறுக் ஷிஹான்

மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் திங்கட்கிழமை(12) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இதன் போது சந்தேக நபர்கள் இருவரும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளையும் சூட்சுமமாக மறைத்து அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் பகுதிக்கு எடுத்துச்செல்லும் போது சோதனைச்சாவடியில் வைத்து கைதாகினர்.

இவ்வாறு கைதானவர்கள் ஆலையடிவேம்பு பொத்துவில் பகுதியை சேர்ந்த 49 மற்றும் 37 வயதினை உடையவர்களாவர்.

கைதாகவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள்  மீட்கப்பட்ட இரு துப்பாக்கிகள் தொடர்பாக திருக்கொவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்