ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கி ஒலிப்பதிவு கமராவை எடுத்துச் சென்றுள்ள விடயமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு.

எப்.முபாரக்  2020-10-13
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரைத்  தாக்கி ஒலிப்பதிவு கமராவை எடுத்துச் சென்றுள்ள விடயமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட  ஊடகவியலாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11)  கந்தளாய், அக்போபுர சீனிஆலை பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கியாஸ் ஷாபியால்  இன்று(13) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  அக்போபுர பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற போதே அப்பகுதி இளைஞர்கள் சிலரினால் ஊடகவியலாளரை தாக்கி ஒலிப்பதிவு கமராவை பறித்துச் சென்றுள்ளதாக தெரிவித்து ஐ ரீ என் ஊடகவியலாளரால் யூசுப் என்பவரால்  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த  அக்போபுர பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறித்து, தாம்  திருப்தியடைவதாகவும், பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கை  பொலிஸ் நிலையம்,  பொதுசனத் தொடர்பில்
எதிர்பார்க்கின்ற மக்களின் நன்மதிப்பையையும் நம்பிக்கையையும் பெற்றுக் கொள்ள வழிசமைக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
0719300966

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.