ஓட்டமாவடியில் வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக டெங்கு தாக்கம்!!!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி தபால் அலுவலகம் மற்றும் ஏனைய இடங்களின் முன்னால் காணப்படும் வடிகாண்களின் கழிவுக் குப்பைகள் அதிகமாக காணப்படுவதுடன், நீர் செல்ல வழியின்மையால் டெங்கு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் டெங்கு பெருகக் கூடிய அபாய நிலை காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதுடன், ஓட்டமாவடியின் சில பகுதிகளில் டெங்கு அபாயம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனால் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி தபால் அலுவலகம் மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஆகியவற்றுக்கு வரும் மக்கள் டெங்கின் அச்சத்துடன் தங்களது சேவைகளை பெறுவதற்காக செல்கின்றனர். மக்கள் கொரோணா வைரஸ் தாக்கத்திற்கு அச்சப்படுவதா அல்லது டெங்கு தாக்கத்திற்கு அச்சப்படுவதா என்ற நிலையில் காணப்படுகின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஓட்டமாவடி பிரதேச சபை உரிய கவனம் செலுத்தி வடிகாண்களை துப்பரவு செய்து, வடிகான்களுக்கு மூடி அமைத்து மக்களை டெங்கில் இருந்து காப்பாற்ற முன்வருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(ந.குகதர்சன் – 0778730529)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்