பொலிஸின் வலையில் ரிஷாத் சிக்கியது எப்படி?..

கடந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புது கையடக்கத் தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதவிர, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை களுபோவில வைத்தியசாலை அருகே அவர் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்