திருமலை சட்டத்தரணிகள் இன்றும்- நாளையும் நீதிமன்றுக்கு சமூகமளிக்க மாட்டார்கள்…
திருகோணமலை சட்டத்தரணிகள் இன்றும் நாளையும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் முகமாக திருகோணமலை சட்டத்தரணிகள் இன்று புதன்கிழமை மற்றும் நாளை வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் தமது நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இருந்தபோதிலும் இன்றையதினம் வழக்குகளுக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டவர்களுக்கு திகதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை