இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது – வேறு நோய் உள்ளவர்களை வெகுவாக பாதிக்கக்கூடும்

இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.

இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார்.

இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார்.

 

 

இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.

நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் (Department of Immunology and Molecular Medicine and Allergy> Immunology and Cell Biology Unit of University) பிரிவைச் சேர்ந்த, பேராசிரியர் நீலிகா மலவிகே தலைமையில், வைத்தியர் சந்திம ஜீவந்தர, வைத்தியர் டெஸ்னி ஜயதிலக, வைத்தியர் தினுக ஆரியரத்ன, லக்சிறி கோமஸ், தியனாத் ரணசிங்க ஆகியோரினால் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பலலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவம் தொடர்பான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்தீம ஜிவன்தர இது தொடர்பாக தெரிவிக்கையில், மினுவங்கொடை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட 16 வைரசு மாதிரிகளில் 13 வைரஸ் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அவை அனைத்தும் வெவ் வேறு இடங்களில் பெறப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியானவை. B1 42 சார்ஸ் வகைக்கு உட்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவை. B 1, 6 1 4 G வைரஸ் இனத்தைச் சேர்ந்தவை என எண்ணுகின்றோம். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என நம்புகின்றோம்.

B 1, B 2, B 4 ஆகியவற்றில் B 1 னே ( பீ ஒன்றே) ஆரம்பத்தில் ஜரோப்பிய நாடுகளில் அதிகாமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்பொழுது டென்மார்க்கிலும் சுவிடனிலும் காணப்படுகின்றது. மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய வாயப்புகள் அதிகம். இது தொடர்பில் எமக்கு சரியான தெளிவு இன்னும் இல்லை.

பல்வேறு மட்டத்தில் இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொற்று ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறமுடியாது இருப்பினும் விசேடமாக வேறு நோய் உள்ளவர்களை இந்த வைரஸ் வெகுவாக பாதிக்கக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மார்ச் மாதம் தொடக்கம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வைரஸ்கள் காணப்பட்டன. இவை அனைத்திலும் பார்க்க இது வேறுபட்டது. இதற்கு முன்னர் இலங்கையில் இந்த புதிய வைரஸ் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்