உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.65 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலையின்படி, 5,65,34,629 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,93,13,919 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரசுக்கு உள்ளாகி இதுவரை 13 இலட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,58,66,895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,01,093 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற நிலைமையில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 69 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 617 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 35 ஆயிரத்து 645 பேருக்கும், இத்தாலியில் 34 ஆயிரத்து 283 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பரவிய நாடுகளாக அமெரிக்கா (1,18,69,289), இந்தியா (89,12,908), பிரேசில் (59,47,403), பிரான்ஸ் (20,65,138), ரஷியா (19,91,998) ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்