கொவிட் 19 காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் குறும் திரைப்பட போட்டி நிகழ்ச்சி

மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம்,யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின்
உதவியுடன் கலைப்பீட மாணவர்களுக்காக நடாத்தப்படும் குறும் திரைப்பட போட்டியின் அங்குரார்ப்பண
வைபவம்zoom அ தொழிநுட்பத்தினுடாக 20.11.2020 அன்று மு.ப. 11மணியளவில் இடம் பெற்றது.

இதில்அதிதிகளாக திரு. புபுது சுமன சேகர- (ADIC)நிறைவேற்றுப் பணிப்பாளர்  , கலாநிதி எஸ் .ரகுராம் –
(சிரேஷட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலைப் பீடம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) கலந்து கொண்டனர்.

மேலும் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலயத்தின் சார்பாக மனிதவள முகாமையாளர் சம்பத் டி
சேரம் நிகழ்ச்சி முகாமையாளர் திரு. அமர்நாத் தென்ன உட்பட ஏனைய அதிகாரிகளும் யாழ்
பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் விரிவுரையாளர்களான திருமதி. பூங்குழலி சங்கீர்த்தனன்

தினேஷ கொடுதோர் ,எல் .அனுதர்சி . எம் .துலாபரணி, பி . சிவதர்ஷனி ஆகியோருடன்; 100ற்கும்
அதிகமான பல்கலைக்கழக மாணவர்களும்  தொழிநுட்பத்தினுடாகப் பங்குபற்றியதுடன் மதுசாரம் மற்றும்
போதைப் பொருள் தகவல் நிலையத்தின்  முகப்புத்தகத்தில் அதன் நேரடி ஒளிபரப்பையும்
அதிகமானவர்கள் கண்டுகளித்தனர்.

 

இன் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர்எஸ் .ரகுராம் இப்போட்டி
நிகழ்ச்சியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் மாணவர்களின் வகிபாகம் தொடர்பாகவும்; உரை
நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நிறுவனத்தின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமண சேகர ‘மதுசாரம் புகைப்பொருள் நிறுவனங்களும்; ஏனைய
போதைப்பொருள் வியாபாரிகளும் எவ்வாறு இளைஞர்களை இலக்கு வைக்கின்றனர், இளைஞர்களின் பலம் என்ன
என்பது தொடர்பாகவும்’ உரையாற்றினார்.
இப்போட்டியின் தொனிப்பொருள் ‘சிகரட் ,மதுசாரம், கஞ்சா தொடர்வான விளம்பரங்களை வெளிக்
கொணருவோம், பலவீனப்படுத்துவோம்’ என அமைந்தது. அதுதவிர யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவு
மாணவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்பதுடன் இப்போட்டியில் வெற்றி
பெறுவர்களிற்கு முதலாம் பரிசாக ரூயஅp;பா 50000.00;ரூபவ் இரண்டாம் பரிசாக ரூயஅp;பா 30000.00;ரூபவ் மூன்றாம்
பரிசாக  20000.00 வழங்கப்படுதுடன் முதல் பத்து இடங்களிற்கு சான்றிதழ்களுடன் ஆறுதல் பரிசுகளும்
வழங்கப்பட இருக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.