பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது-யாழ் நீதவான் நீதிமன்றம்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த  முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பின் நினைவுநாளை நடத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனவும் நீதிமன்றில் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 27ஆம் திகதி உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்க கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.