இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டம் -யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம்

இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  இன்று (01)இடம் பெற்றது.

குறித்த விளக்கமளிக்கும் கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ,மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம் ) ,மேலதிக அரசாங்க அதிபர் (காணி),பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச இராணுவ பிரிவுகளின் தளபதிகள் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத்பண்டார , வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
குறித்தநிகழ்வில் உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதும் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றது என தெரிவித்தார்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.