முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த அதிக மழை வீழ்ச்சியினால்கரையோரப் பகுதிகள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த அதிக மழை வீழ்ச்சியினால் கரையோரப் பிரதேசங்க வெள்ள வெள்ளநீர் மூடி காணப்படுகின்றது.

கரையோரத்தின் சில இடங்களில் நேற்று இரவு கடல் நீர் உட்புகுந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் 100 மீட்டர் அளவில் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந் நிலையில் அங்கிருந்து வெளியேறிய மக்கள், இன்று காலை தமது பகுதிகளுக்கு மீளத் திரும்பியிருந்தனர். இதேவேளை காற்று வேகமாக வீசியதால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வாடி வீடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு நகரை அண்டிய சின்னாறு பெருக்கெடுத்துள்ளது. இதனால் செல்வபுரம் வீதியை மூடி ஆற்றுநீர் பாய்ந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனால் அந்தப் பாதையின் ஊடாக பயணத்தில் ஈடுபடும் பொதுமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் சின்னாற்று நீர் தமது இருப்பிடங்களுக்குள்ளும் புகும் ஆபத்துள்ளதாக ஆற்றின் அருகே உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஆற்று நீரினை கடலில் வெட்டி விடுவதற்குரிய நடவடிக்கையை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் ஆற்று நீரை வெட்டி கடலுடன் விடுவதற்கான முயற்சி எடுத்தால், கடல் நீர் மக்கள் குடியிருப்புக்கள் உட்புக வாய்ப்பு இருப்பதாக உரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நந்திக்கடலிலும் நீர் நிரம்பிக்காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந் நிலையில் அங்கு மீனவர்கள் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளின் நிலைமைகள் தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப்பிரதேசசபை உறுப்பினர் ம.தொம்மைப்பிள்ளை உள்ளிட்டவர்கள் நேரில் சென்று ஆராய்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(விஜயரத்தினம் சரவணன்)

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.