முல்லைத்தீவு -நந்திக்கடல் ஆற்று நீர் பெருங்கடலில் வெட்டிவிடப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பெய்த கனமழையின் காரணமாக வட்டுவாகல் நந்திக் கடல் நீர் நிரம்பி காணப்படுகிறது.

நந்திக்கடல் ஆறு இவ்வாறு நீர்நிரம்பிக்காணப்படுவதால், வட்டுவாகல் பாலத்தை நீர் மூடும் அபாயம் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் நந்திக்கடல் ஆற்றினுள் மேலதிகமாகத் தேங்கியுள்ள நீரினை கடலில்  வெட்டிவிடும் செயற்பாடு 04.12.2020 இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை பாரம்பரியமாக விசேட பூசை வழிபாடுகளுடன் குறித்த நந்திக்கடல் ஆற்றில் மேலதிகமாக தேங்கியுள்ள நீர், பெருங்கடலில் வெட்டி விடப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டசெயலர் க.விமலநாதன், முல்லைத்தீவுமாவட்ட அனர்த்தமுகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார், கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் திருமதி உமாமகள் மணிவண்ணன், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவுமாவட்ட கடற்றொழில் சமாசம், சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

(விஜயரத்தினம் சரவணன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.