பழைய உஹன வீதியினை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பழைய உஹன வீதியினை புனரமைத்துத் தருமாறு சமூக மட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நீண்ட காலமாக சுமார் இருபது வருட காலத்திற்கு மேலாக புனரமைப்பற்று குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் பாதையினைப் பயன்படுத்தும் நாவிதன்வெளி செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாவதாக தெரியவருகிறது.

15 ஆம் கிராம சந்தியிலிருந்து இலுப்பைக்குளம் ஊடாக மத்தியமுகாம் 11 ஆம் கிராத்திற்கு செல்லும் சுமார் 04 கிலோமீற்றர் தூரமுடைய
பிரதான பாதையே இவ்வாறு புனரமைப்பற்று காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாவிதன்வெளி செயலக பிரிவிலிருந்து அம்பாறை, உஹன, வெல்லாவெளி, பட்டிப்பளை ஆகிய செயலகப் பிரிவுக்கு அன்றாட கருமங்களை இப்பாதையின் ஊடாகவே மேற்க்கொள்ளும் பொதுமக்கள் பல்வேறு அசெளகரிய சிரமங்களுக்குள்ளாவதாக தெரியவருகிறது. குறித்த பிரதான வீதி பல எல்லைக்கிராமங்களை இணைப்பதுடன் அம்பாறை – மகோயா பிரதான பாதையையும் சென்றடைகின்றது.

இப்பாதை மார்க்கத் தேவை கருதி புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளர் உட்பட மக்கள் பிரதிநிதிகளிடம் பல தடவை கோரியும் இற்றைவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென பொதுமக்கள் கவலையுடன் அங்கலாய்க்கின்றனர்.

பொதுமக்கள் உட்பட வாகன சாரதிகளின் தேவை கருதி குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளை இழுத்தடிக்காமல் துரித கதியில் மேற்க்கொள்ளுமாறு பிரதேச வாழ் பொதுமக்களும் சமூக மட்ட அமைப்புகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

(துறையூர் தாஸன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.