யாழ் மாவட்டத்திற்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது-அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (5) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ,யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 17 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 57ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா கூறியுள்ளார்.

இத்துடன் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ,யாழ்.மாவட்டத்தில் தற்போது 38 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 959 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 393பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 62 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 535 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.