முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க காலமானார்!

முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க காலமானார்.

அவர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குருநாகலில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையிலேயே இன்று (06) காலமானார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு இவர் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அவர், கடந்த பொதுத் ​தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டார். எனினும், வெற்றியீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.