கிளிநொச்சி மாவட்டத்தில் 1926 குடும்பங்கள் பாதிப்பு…

கிளிநொச்சி மாவட்டத்தில் 1926 குடும்பங்களை சேர்ந்த 5668 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 4மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 3 வீடு முழுமையாகவும், 276 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களை சேர்ந்த 134பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 658 குடும்பங்கள சேர்ந்த 2031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 249 குடும்பங்கள சேர்ந்த 676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 723 குடும்பங்கள சேர்ந்த 1988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முழுையாகவும், 196 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.

இரணைதீவு அனர்த்தத்தினால் சிக்கியுள்ள 88 குடும்பங்களை சேர்ந்த 134 பேர் தொடர்ந்தும் 2 பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 296 குடும்பங்கள சேர்ந்த 973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கபபட்ட மக்களிற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை அந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.