தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு…
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது என நீதிமன்று தெரிவித்துள்ளது.
இன்றைய தினம்(07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு காணொளி தொழில்நுட்ப வசதி ஊடாக நடைபெற்றது.இதன்போதே சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை நீதிபதி பிறப்பித்தார்.
இன்றைய தினம் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், காணொளி தொழில்நுட்பம் வசதி ஊடாக வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதன் போதே பிரசாந்தனின் விளக்கமறியலை நீடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை