திருகோணமலை-30 வருடகாலமாக நிரந்தர வீடின்றி கொட்டிலில் வாழ்ந்த பத்மலோகராணிக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகையளிப்பு !
திருகோணமலை மாவட்டத்தின் வெள்ளைமணல் கரடிப்பூவல் கிராமத்தில் கடந்த 30 வருடகாலமாக நிரந்தர வீடின்றி கொட்டிலில் வாழ்ந்த டி.பத்மலோகராணி என்பவருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு (06ம்திகதி) பாவணைக்காக கையளிக்கப்பட்டது.
இதனை நிர்மாணிக்க வன்னி ஹோப் அவுஸ்த்திரேலியா மற்றும் மக்கள் சேவை மன்றம் என்பன நிதியுதவியை வழங்கின.
உரிய வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர்
என். பிரதீபன் மாவட்ட செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜே.சுகந்தினி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



கருத்துக்களேதுமில்லை