திரு. ந. ஜெனார்த்தனன் அனுசரணையுடன், கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி இணைந்து நடாத்தும் “புரவி” வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதி வழங்கும் செயல்திட்டம்…

“புரவி “புயலின் தாக்கத்தினால் ஶ்ரீ மீனாட்சி முன்பள்ளி கொட்டடி யாழ்ப்பாணத்தில் இன்று (05-12-2020) திரு. ந. ஜெனார்த்தனன் அனுசரணையுடன், கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி இணைந்து நடாத்தும் “புரவி” வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதி வழங்கும் செயல்திட்டம் நடைபெற்றது.
“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” இச் செயல்திட்டம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் சுகாதார பரிசோதகர், ஶ்ரீ மீனாட்சி முன்பள்ளி நிர்வாகத்தினர்,சமூகசேவையாளர் திரு.காந்தன் மற்றும் லவ்லி கிறீம் கவுஸ் முகாமையாளர்களான லோசன், புவிராச் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டது. இந்தச் செயல்திட்டமானது வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதனையும், உங்கள் பிரதேசங்களில் செயற்படுத்தப்படும் போது அனைவரும் எம்முடன் இணைந்து இச் செயற்திட்டத்திற்கு உங்கள் முழுமையான ஆதரவினையும், பங்களிப்பினையும் தந்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.