(வைரலாகும் வீடியோ)மாம்பழங்களால் ஆடை தயாரித்த அவுஸ்திரேலிய யுவதி!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவர் 700 அதிகமான மாம்பழங்கள் மூலம் தனது ஆடையை தயாரித்துள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஜெசிக்கா கொலின்ஸ் எனும் 18 வயதான யுவதியே இந்த ஆடையைத் தயாரித்துள்ளார்.
மாம்பழ விதைகளின் வெளிப்புற கோதுகளை வெட்டி, சுத்திகரித்து உலர வைத்து, அவற்றை துணியொன்றில் இணைத்து தைத்ததன் மூலம், முழுநீள போல்கவுண் ஆடையை அவர் வடிவமைத்துள்ளார்.
இதற்காக 700 மாம்பழங்களிலிருந்து பெறப்பட்ட 1400 மாம்பழ விதைக் கோதுகளை ஜெசிக்கா பயன்படுத்தியுள்ளார்.
சிட்னியின் வஹ்ரூங்கா பகுதியிலுள்ள அபோட்ஸ்லே பாடசாலை 12 ஆம் தரத்தில் கல்வி கற்றபோது, தனது வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப செயற்திட்டத்துக்காக இந்த ஆடையை ஜெசிக்கா தயாரித்துள்ளார்.
தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையொன்றில் ஒதுக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையான மாம்பழங்களைப் பார்த்தவுடன், அவற்றை ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தும் எண்ணம் தனக்குத் தோன்றியதாக ஜெசிக்கா கொலின்ஸ்.தெரிவித்தார்

s

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்