மொட்டு’ அரசின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்! – வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கன்னி வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.
அரசும் அதன் பங்காளிக் கட்சிகளும் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 பேரும், எதிராக பேரும் 54 வாக்களித்தனர்.
2021ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்டையுடன் அது நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் ஆரம்பமானது. இந்நிலையிலேயே வரவு – செலவுத் திட்டம் மீது இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது.
அதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்
கருத்துக்களேதுமில்லை