உள்ளுராட்சி அதிகாரத்தில் தேவையற்ற தலையீடே தவிசாளர் விளம்பரப் பதாகையை அகற்றக்காரணம் – பாரளுமன்றில் சித்தார்த்தன் எம்.பி

உள்ளுராட்சி மன்ற விடயங்களில் மத்திய அரசு தேவையற்ற தலையீட்டைக்கொள்ளக்கூடாது. இவ்விடயங்கள் பிரதமரின் விடயத்திற்குள் வருவதால் இவ்விடயத்தினை இந்தஇடத்தில் முன்வைக்கின்றேன் என பாராளுமன்றில் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.
நிதி அமைச்சு மீதான விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்,
கோப்பாய் பிரதேச சபையின் அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கு மத்திய அரசாங்கம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. நிச்சயமாக அது ஓர் உள்ளுராட்சி சபை வீதியாக இருப்பதனால் அப் பிதேச சபைத்தவிசாளர் இடமோ சபையிடமே அனுமதியின்றி நடவடிக்கைகள் நடைபெற்றமையினால் தவிசாளர் நிரோஷ் அப் பெயர்ப்பலகையினை அகற்றியிருந்தார்.
இப் பிரச்சினை இன்று மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து பொலிசார் தவிசாளரைக் கைதுசெய்ய நிலைமைக்குச் சென்று அவர் முன்பிணை எடுக்கின்ற நிலைக்கும் சென்றுள்ளது.
இவ்விடயம் தனிப்பட பிரதேச சபைத் தவிசாளருக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருக்குமான பிரச்சினை இல்லை. இது உண்மையில் மத்திய அரசு தன்னுடைய நிறுவனமான வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலம் உள்ளுராட்சிசபை அலுவல்களிலே தலைவைக்கின்றது என்பதாகும். இது ஒரு தவறான செயற்பாடு இதை நிச்சயமாக கவனத்தில் எடுத்து அதை சீர்திருத்தவேண்டும். இப்படியாக ஒவ்வொரு விடயத்திலும் பிரச்சினைகள் எழக்கூடாது. இவ்விடயங்கள் பிரதமரின் விடயத்திற்குள் வருவதனால் இவ்விடயங்களை அவர் தீர்வுகளைக் காண்பதற்காகக் கூறவேண்டியுள்ளது என பாராளுமன்றில் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.
இதேவேளை பாரளுமன்றில் வினோநோகராதலிங்கம் எம். பியும் ஏற்கனவே இவ ;விடயத்தினை முன்வைத்து பாரளுமன்றில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.