கொழும்பில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 445 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 762 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 445 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பொரள்ளை பகுதியில் 21 பேரும், மட்டக்குளிய பகுதியில் 175 பேரும், கொம்பனி வீதி பகுதியில் 36 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், மருதானையில் 35 பேருக்கும், வெள்ளவத்தையில் 32 பேருக்கும், புதுக்கடையில் 4 பேருக்கும் நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், புளூமெணடல் பகுதியிலிருந்து 14 பேரும், கிராண்பாஸ் பகுதியிலிருந்து 26 பேரும், தெமட்டகொடையில் 49 பேரும், கிருலப்பனையில் 10 பேரும் நேற்றையதினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, அத்துருகிரிய , ஹோமாகம, கொலன்னாவ , கொஸ்கம, கொட்டாவ, மொரட்டுவ, முல்லேரியாவ, நவகமுவ ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், அவிஸ்ஸாவெலயிலிருந்து 12 பேரும், ஹன்வெல்ல பகுதியிலிருந்து 5 பேரும்,மகரகம பகுதியிலிருந்து 6 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பாதுக்க பகுதியிலிருந்து இருவரும், வெள்ளம்பிட்டிய பகுதியிலிருந்து 4 பேரும், கொத்தட்டுவ, கடுவெல, களுபோவில ஆகிய பகுதிகளில் தலா இருவர் வீதம் கொரோனா தொற்றுடன் நேற்றை தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹவாலிருந்து  இருவரும், திவுலபிட்டிய பகுதியிலிருந்து நால்வரும், தொம்பே பகுதியிலிருந்து மூவரும், கந்தானை பகுதியிலிருந்து இருவரும் நேற்றையதினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்,  கட்டுநாயக்க பகுதியிலிருந்து 6 பேரும், களனியிலிருந்து 10 பேரும், கொடதெனியாவ பகுதியிலிருந்து 3 பேரும், மஹர பகுதியிலிருந்து 75 பேரும், மீகாவத்த பகுதியிலிருந்து 14 பேரும் நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மினுவங்கொடை பகுதியிலிருந்து 6 பேரும் வத்தளையிலிருந்து 7 பேரும், பியகம, தனகஹபிட்டிய மற்றும் பமுனுகம ஆகிய பகுதிகளிலிருந்து தலா ஒருவர் வீதம் நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இதுவரை 27 ஆயிரத்து 521 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 398 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 604 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளதாக சுகாததார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.