அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 2 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கொரோனா தொற்றுக்குள்ளான 2 இலட்சத்து 46 ஆயிரத்து 530 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமெரிக்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்காவில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 இலட்சத்து 95 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது

அத்துடன், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் மேலும் மேலும் 3 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 750 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.