அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் அதில் வெற்றி பெறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வடகிழக்கில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா என்பது குறித்து சிந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.