கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேலும் 504 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 504 இலங்கையர்கள் இன்று (13) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

டுபாயில் இருந்து 144 பேரும், மாலைத்தீவில் இருந்து

31 பேரும், கட்டாரில் இருந்து 51 பேரும், அவுஸ்த்திரேலியாவில் இருந்து 75 இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், ஜபானின் நரீட்டாவில் இருந்து 203 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர் .

 

இதேவேளை, குறித்த அனைவருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்