விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பு !

சர்வதேச விமான சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் நாட்டில் உள்ள விமான நிலையங்களை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கட்டுநாயக்க, மத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமானநிலையங்களுக்கான வணிக மற்றும் விசேட விமானங்கள் என்பன மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, விமான நிலையங்கள் திறக்கப்பட்டதும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சுகாதார வழிமுறைகள் என்பன வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விமான நிலையங்களை திறப்பதற்கான உறுதியான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமெனவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.